01.11.07
தண்ணீருக்காக ஒரு ஓட்டம் – மதுரக்காரய்ங்க கவனிக்க
இப்போதெல்லாம் விழிப்புணர்வு மராத்தான்கள் காலத்தின் கட்டாயமாகிக் கொண்டிருக்கின்றன – ஹைதராபாத் 10K ரன், பெங்களூர் 5K ரன், மும்பை மராத்தான் என்ற விழிப்புணர்வு ஓட்டங்களின் வரிசையில் வருகிறது மதுரை மராத்தான்.
பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த நீராதாரங்கள் இப்போது சுருங்கிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் மதுரை போன்ற பெருநகரங்களில், தண்ணீர் சிக்கனத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட மிக மிகக் குறைவாக உள்ள காலகட்டத்தில், மதுரை மராத்தான் போன்ற ஓட்டங்கள் அந்த நிலையை மாற்ற பெரிதும் பயனுள்ள வழிமுறைகளாக உள்ளன.
பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்த நீராதாரங்கள் இப்போது சுருங்கிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் மதுரை போன்ற பெருநகரங்களில், தண்ணீர் சிக்கனத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட மிக மிகக் குறைவாக உள்ள காலகட்டத்தில், மதுரை மராத்தான் போன்ற ஓட்டங்கள் அந்த நிலையை மாற்ற பெரிதும் பயனுள்ள வழிமுறைகளாக உள்ளன.

தான் அமைப்பினரால் நடத்தப்படும் இந்த மதுரை மராத்தான் நடக்கப் போகும் நாள் 13- ஜனவரி-2007 - பொங்கலை ஒட்டி.
- மினி மராத்தான் ஓட்டம்
- நீருக்காக ஒரு நடைபயணம்
- புகழ்பெற்றவர்களுடன் நடை
- வித்தியாசமான உடல்நிலையாளர்களின் ஓட்டம்
- ஸ்கேட்டிங்
- நீர் சேமிப்பு பற்றிய கலை நிகழ்ச்சிகள் – மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
- நீர்க் கண்காட்சி
- பொங்கலை ஒட்டி மதுரையில் இருக்க வசதிப்பட்ட நண்பர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம். அனுமதிக்கட்டணங்கள் உள்ளன, ஒரு அடையாளக்கட்டணமாக.
- மண்ணின் மைந்தர்கள், தமக்குத் தெரிந்த, தாம் அறிந்த பழைய நீர்வளமிக்க மதுரையைப் பற்றிய விஷயங்களைக் கட்டுரையாக, வரைபடமாக, புகைப்படங்களாக, பழைய பத்திரிக்கைச் செய்திகளாக, விருப்பப்பட்ட வகையில் மதுரை மராத்தான் குழுவினருக்கு அளிக்கலாம். இதன் மூலம் இன்றைய மதுரைவாசிகள் மதுரையின் பழைய நீர்வளத்தை அறிந்து கொள்ளவும் அவற்றை மீட்பதற்கும் ஏதுவாகும்.
- “நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் கருத்தைப் பிரதிபலிக்கும் விதமான கட்டுரைகளை (ஒன்று அல்லது இரண்டு பக்க அளவில்) எழுதிக் கொடுக்கலாம். விழிப்புணர்வைத் தூண்டும் இது போன்ற கட்டுரைகள் மதுரை நகர செய்தித்தாள்களில் இடம்பெற்று அனேகரைச் சென்றடையக் கூடும்.
- தண்ணீர் சிக்கனம், நீர் சேமிப்புக்கான வழிமுறைகளைப் பற்றியும் கட்டுரைகள் மூலம் பகிரலாம்.
- பங்கெடுப்பவர்களுக்கு உதவுமுகமாக உங்களால் முடிந்த பணத்தைக் கொடுக்கலாம். அது பற்றிய விவரங்கள் அறிய இங்கு சுட்டவும்.
- மதுரை வாசியாக இருந்தால், பங்கெடுப்பவர்களுக்கு உதவவும், அவர்களை நெறிப்படுத்தவும், பங்கெடுக்கும் பொது மக்களை நெறிப்படுத்தி உதவவும் தன்னார்வலராகப் பணிபுரியலாம்.
மதுரை மராத்தான் குறித்து மேலும் அறிய:
[இந்த இடத்தில் தண்ணீரைப் பற்றிய என்னுடைய பழைய கவுஜயை நினைவுறுத்த விரும்புகிறேன். ஓடத் தயங்குபவர்களிடம் கவுஜ படித்துக் காட்டினால், தலை தெறிக்க ஓடிவிடுவார்கள் என்பது உறுதி
]