12.01.06

பூனை.. பூனை.. பூனைக் குட்டி…

.... இங்கே பதியப்பட்டது கவிதை, சிறுவர் பக்கம், நட்சத்திரப் பதிவுகள இல் 5:51 பிற்பகல் by பொன்ஸ்

[தலைப்புக்காக நாடோடிக்கு நன்றி. பதிவும் இன்னுமொரு மீள் பதிவு தான். சிறுவர் பூங்காவில் இருந்ததை இங்கே பொன்ஸ் பக்கங்களில்..]

எங்கள் வீட்டுப் பூனை

எங்கள் வீட்டுப் பூனை
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை

எலியைக் கண்டு விரைவாய்
எதிர்ப்பக்கம் ஓடும் பூனை;
சலிக்காமல் தான் வெளியே
சாலை சுற்றும் பூனை

பல்லி பிடித்து வாலை
மட்டும் வெட்டும் பூனை
மல்லிப்பூ போல் வெண்மை
மாறாத பூனை

தங்கையோடு சேர்ந்து
தானும் தூங்கும் பூனை.
சங்கு கழுத்தைத் தூக்கி
தாய்மடி கேட்கும் பூனை

நாயைக் கண்டு நடுங்கி
நன்றாய் ஓடும் பூனை
வாயை மெல்லத் திறந்து
கொட்டாவி விடும் பூனை

காலை சரியாய் அழைத்து
உறக்கும் கலைக்கும் பூனை
பாலைக் குடித்து மீதம்
பகைக்கும் வைக்கும் பூனை

அருஞ்சொற் பொருள்:[இது ஒண்ணு தான் குறைச்சல் :) ]
பகை = பகைவனான காட்டுப் பூனை

படத்தில் இருப்பது நாங்கள் வளர்த்த செல்லப் பூனை பொம்மு.

அடுத்த பக்கம்