02.12.07

சாகரனுக்கு அஞ்சலி….

.... இங்கே பதியப்பட்டது அஞ்சலி, நிகழ்வுகள் இல் 10:56 மு.பகல் by பொன்ஸ்


காலை அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தவுடன் தலை பாலபாரதியிடமிருந்து அந்தத் துக்ககரமான தொலைபேசிச் செய்தி… தேன்கூடு நிறுவனரும், தமிழார்வலருமான சாகரன் என்னும் கல்யாண் அவர்களின் மரணச் செய்தி !

29 வயதெல்லாம் மாரடைப்பு வரும் வயதா என்ன?! கொடுமை!

அதிகம் பழகியதில்லை என்றாலும், சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்புக்கு இனிப்புகளுடன் வந்து இனிமையாக கலந்து கொண்ட கல்யாண் இன்று நம்மிடையே இல்லை என்பதை நம்பவே முடியவில்லை!

தமிழோவியத்துடன் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுக்கான தேர்வு முறைகள் அத்தனை நேர்த்தியாக இல்லை என்ற எங்களின் குறைகளைக் கேட்டுவிட்டு, சீக்கிரத்தில் வேறு விதமான போட்டி ஒன்றைத் துவங்கப் போவதாகச் சொல்லிச் சென்றார். பிப்ரவரி நான்காம் தேதி, (கடந்து போன ஞாயிற்றுக்கிழமை!) அன்று தொடர்ச்சியாக, சுடர் விளையாட்டின் துவக்கத்தை பற்றி மடலனுப்பி இருந்தார். வெளியூரில் இருந்தமையால், கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து, வேறொருவர் பெயரைப் பரிந்துரைத்து எழுதியது, நேற்று நடந்தது போல் இருக்கிறது!

அதிர்ச்சியிலிருந்து மீண்டுவரவே இன்னும் நாளாகும் போல் இருக்கிறது.

கல்யாண் அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்! :(