04.09.07

பதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்

.... இங்கே பதியப்பட்டது பதிவுகள், மகளிர் சக்தி, வெட்டி இல் 3:04 பிற்பகல் by பொன்ஸ்

இப்போது முதல், இன்னும் சிலகாலத்துக்கேனும் பின்னூட்டங்கள் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பொன்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு பதிவர் உருவாகி இருப்பதே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம்.

தோழி ஒருவர் அழைத்து, “பொன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய ப்ரோபைல் ரெடியாகிறதே, பார்த்தாயா?” என்று கேட்டபொழுது, “அப்படியா!” என்று வியக்கத்தான் முடிந்தது.

பெண்களுக்கெதிரான வன்முறை மிகச் சுலபமாகக் கைவரக் கூடியது. அதிலும், நட்புரீதியாக கை நீட்டுபவர்களுடன் மிக இயல்பாகக் குலுக்கிவிடும் மனமுடைய என்னைப் பற்றி என்மூலமே திரட்டப்பட்ட தனிப்பட்ட தகவல்களுடனான பொய்யான ப்ரோபைல் உருவாக்க, இணையம் ஒரு வசதியான ஊடகம் என்பதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்..

சமீபத்தில், பெண்கள் தொடர்பான என்னுடைய இடுகைக்கு, எதிர்வினையான சில கும்மிப் பதிவுகளில், ஒரு அனானி இது போன்ற ஒரு ப்ரோபைலை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தார். ஒருவழியாக இன்று அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட அவருக்கு என் வாழ்த்துக்கள். [விடுபட்டவை: போலி மட்டுமா போலி பதிவு ஏனோ திடீரென நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை ]

இந்த முகமிலிகளுடன் மோதி, தர்மயுத்தம் செய்ய எனக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலும், இதைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பின்னூட்டமிட்டால் கூட, ஒவ்வொருமுறையும் சோதித்து வெளியிடும் சிரமத்தை நண்பர்களுக்குக் கொடுப்பதில் விருப்பமில்லாததாலும், பின்னூட்டங்கள் இடுவதை நிறுத்திக் கொள்வது ஆகச் சிறந்த வழியாகத் தெரிகிறது.

எனவே, இன்று முதல், பொன்ஸின் எழுத்துக்கள், இங்கு பட்டியலில் உள்ள வலைப்பதிவுகளில் மட்டுமே வரும்.. மற்ற முகமிலிகளிடம், இரவல் முகத்துடன் வருபவர்களிடமும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு:
1. இரவல் முகத்துக்காரருக்கு லிங்க் கொடுத்துப் புகழ் சேர்க்க விருப்பமில்லை. அவகாசமும் அவசியமும் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்ளலாம் :)
2. தனிமடல்கள், தொலைபேசியில் பேசுபவர்கள், இந்த விசயம் குறித்து தயவு செய்து பேச வேண்டாம். வரப் போகும் பதிவர் சந்திப்பு தொடங்கி நாம் பேச எத்தனையோ ஆக்கப் பூர்வமான விசயங்கள் இருக்கின்றன தானே..

63 மறுமொழிகள் »

  1. வரவனையான் சொன்னார்,

    வன்மையாக கண்டிக்கவேண்டிய விடயம். தமிழ்மணம் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைப்பின் முழு ஆதரவு இதற்கு உண்டு. உங்களுக்குகாக களம் இறங்கவும் ஆயுத்தமாகவே உள்ளது

  2. கொழுவி சொன்னார்,

    //தர்மயுத்தம் செய்ய எனக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலும்,//

    நல்ல வேளை.. நீங்க யுத்தம் ஆரம்பிச்சா அப்புறம் ஆசிரியர் நம்மளையும் களத்துக்கு அனுப்ப நாம அங்கினே பொஞ்சாதி புள்ளைங்களை பிரிஞ்சு களத்திலிருந்து பதிவு போட வேண்டியதில்லை.

    போன முறை பட்ட காயங்களும் இன்னும் ஆறவில்லை.

    அது நிற்க.. உங்க பெயரில ஒரு போலி உருவானால்த்தான் நீங்க உண்மையான ஒரு தமிழ் வலைப்பதிவர்.

  3. மோகன்தாஸ் சொன்னார்,

    பொன்ஸ் நல்ல முடிவு. ஆனால் பின்னூட்டம் போடாமல் தமிழ் பதிவுலகத்தில் சமாளிக்க முடியாது ;)

  4. லக்கிலுக் சொன்னார்,

    அந்த சைக்கோ எவன் என்று என்னால் ஊகிக்க முடிகிறது.

    மற்றவர் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடமாட்டேன் என்று அடம்பிடிப்பது சரியல்ல. எலிக்குட்டி, புலிக்குட்டி சோதனையில் எல்லாம் நாங்கள் எப்பவோ கரைகண்டுவிட்டோம்.

  5. Anonymous சொன்னார்,

    //அந்த சைக்கோ எவன் என்று என்னால் ஊகிக்க முடிகிறது//

    thasarathan son?????

  6. Hariharan # 03985177737685368452 சொன்னார்,

    //உங்க பெயரில ஒரு போலி உருவானால்த்தான் நீங்க உண்மையான ஒரு தமிழ் வலைப்பதிவர்.//

    //பின்னூட்டம் போடாமல் தமிழ் பதிவுலகத்தில் சமாளிக்க முடியாது //

    இக்கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன்!

  7. ♠ யெஸ்.பாலபாரதி ♠ சொன்னார்,

    //அந்த சைக்கோ எவன் என்று என்னால் ஊகிக்க முடிகிறது//

    மன்னிக்கனும் பொன்ஸ்.. பித்தளையோ, ஈயமோ மட்டும் இதற்கு காரணமாக தோன்றவில்லை.

    தொடர்ந்து திராவிடத்திற்கு ஆதரவாக பேசும் எல்லா பெண்களுக்குமே இது மாதிரியான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பது தான் கடந்த கால வரலாறு. நீங்களும் கூட அப்படியான செயல்களில் ஈடுபட்டது தான் இதற்கான காரணமாக உணரவேண்டி இருக்கிறது. அதனால் தான் சொன்னேன்.. “போலி மட்டுமா போலி” என்று.
    பார்க்கலாம் இன்னும் எத்தனை காலம் ஆடுவார்கள் என்று?

  8. ♠ யெஸ்.பாலபாரதி ♠ சொன்னார்,

    //அந்த சைக்கோ எவன் என்று என்னால் ஊகிக்க முடிகிறது//

    லக்கி.. போனதிலேயே சொல்ல நினைத்தேன். என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆனால்.. உறுதியாக படுகிறது. :)

  9. செந்தில் குமரன் சொன்னார்,

    வலைப் பதிவு அரசியல்ல இதெல்லாம் சாதாரணமாயிடுச்சு. இது நீங்களாகவே யோசித்து எடுக்க வேண்டிய முடிவு இருந்தாலும் மூட்டைப் பூச்சி, வீடு கொளுத்துதல் ஞாபகத்திற்கு வருகிறது மன்னிக்கவும்.

  10. அய்யனார் சொன்னார்,

    இந்த தேன்கூட்டுல என்னோட பதிவவை இனணக்க முடியல என்ன காரணம் பொன்ஸ்?? :)

    ;) ))))

  11. உண்மைத் தமிழன் சொன்னார்,

    அன்புள்ள பொன்ஸ் அக்காவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பாக உங்களது பெயரில் ஒரு வலைத்தளம் தேன்கூடு திரட்டியில் வந்தது. உங்களுடையதுதான் என்று நினைத்து நானும் உள்ளே சென்றேன். சொல்லவே வெட்கமாக இருந்தது. ஆனாலும் உடனேயே என்னுடைய கண்டனத்தை தேனகூடு திரட்டிக்கு தெரிவித்தேன். அடுத்த நாளிலிருந்து அந்த வலைத்தளம் தேன்கூடு திரட்டியில் வரவில்லை. இதை வெளிப்படையாக்கக் கூடாது என்பதற்காக நான் மட்டுமல்ல.. உங்கள் மீது அபிமானமுள்ள பலரும்(இதைப் பார்த்துப் படித்தவர்கள்) அமைதி காத்தோம். இன்று அதே பெயரில் ஒன்று உருவாகிவிட்டதாகச் சொல்கிறீர்கள். இதை எப்படி தடுப்பது என்பது தெரியவில்லை. எனது பெயரிலும் ஒரு வலைத்தளத்தில் இபோலீயாக யாரோ பின்னூட்டம் இட்டு.. அதைத் தற்செயலாகப் பார்த்து நானும் பதில் பின்னூட்டம் போட்டு ஒரு டான்ஸ் ஆடியிருக்கிறேன். கஷ்டம்தான்.. ஆனாலும் நீங்கள் எடுத்த இந்த முடிவு சரியானதுதான். தற்போதைக்கு வராமல் இருப்பதே நல்லது.. ஆனால் எவ்வளவு நாளைக்கு என்ற கேள்வியும் உண்டு.. ஏனெனில் உங்களுடைய சுற்றுநட்பு அவ்வளவு பேர் இருக்கிறார்கள். அனைவரும் வருத்தப்படுவார்களே.. 22ம் தேதி வலைப்பதிவர் கூட்டத்திலாவது ஏதாவது செய்ய வேண்டும்.. வாருங்கள்.. சந்திப்போம்..

  12. உண்மை தெரிந்தவன் சொன்னார்,

    உண்மைத்தமிழன்!

    சம்பந்தப்பட்ட அந்த போலி யாரென்பது கிட்டத்தட்ட நிறையப் பேருக்கு தெரிந்து விட்டது.

    அந்த சைக்கோ உடனே அவனது சல்மா அயூப் என்ற வலைப்பூவையும், இந்த போலி வலைப்பூவையும் டெலிட் செய்யாவிட்டால் அவன் சைபர் போலிஸின் வருகையை எதிர்நோக்க வேண்டியிருக்கும். போலிஸ் அவன் வீட்டுக்கோ அல்லது கிண்டியில் இருக்கும் அலுவலகத்துக்கோ எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

    நிறைய சைக்கோக்களுக்கும் இனிமேல் கேடுகாலம் தான்

  13. நொந்தகுமாரன் சொன்னார்,

    //22ம் தேதி வலைப்பதிவர் கூட்டத்திலாவது ஏதாவது செய்ய வேண்டும்.. வாருங்கள்.. சந்திப்போம்.. //

    உண்மைத்தமிழன், அங்கங்கே நீங்கள் பின்னூட்டம் போடும் லட்சணத்திற்கு உங்களை ஏதாவது செய்துவிட போகிறார்கள். கவனம்!

  14. சென்ஷி சொன்னார்,

    பொன்ஸ் அவர்களுக்கு,
    இந்த பதிவிற்கு பின்னூட்டம் தேவையில்லை என்றுதான் நினைத்தேன்.
    இதுக்கு என்னோட ஒரே பதில் :(
    அவ்ளோதான்.

    சில கேடித்தனங்களுக்காக, பேதைத்தனமா முடிவெடுக்கனுமான்னு யோசிங்க..

    சென்ஷி

  15. அனானி முன்னேற்ற கழகம் சொன்னார்,

    மேற்கண்ட நொந்தகுமாரன் எங்களது கழகத்தின் இலக்கிய அணியை சேர்ந்தவர். அவன் பின்னூட்டத்தை இதுவரை யாரும் வெளியிட்டதில்லை. வெளியிட்ட தோழி பொன்ஸுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

  16. Anonymous சொன்னார்,

    அந்த பதிவு ஏற்கனவே ஜோதி என்ற பெயரில் இருந்தது எங்களுக்கும் தெரியும். அதை எழுதிய மாமாவையும் தெரியும்.

  17. rajavanaj சொன்னார்,

    இந்தச் செயல் கடுமையாக கண்டிக்கத் தக்க ஒன்று..

    சகோதரி பொன்ஸுக்கு ஆதரவாக என்னுடைய கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்

  18. ✪சிந்தாநதி சொன்னார்,

    சமீப காலமாக வலைப்பதிவுகளில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இப்போ இது வேறயா? உங்களுக்கும்?

    :(

  19. பங்காளி... சொன்னார்,

    இதுக்கெல்லாம் அசரமாட்டீர்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது……

    வாழ்த்துக்கள்….

  20. G.Ragavan சொன்னார்,

    வருந்தத்தக்கது. மறைந்திருந்து அம்பு விடுவதில் என்ன இன்பமோ! உங்கள் முடிவிலிருந்து உங்கள் மனம் புரிகிறது. சிறிது பொறுத்திருப்போம். பிறகு பதிவுலகில் பின்னூட்டங்கள் இட்டுக்கொள்ளலாம். துணைக்கு நாங்கள் உண்டு.

    // உண்மை தெரிந்தவன் said…
    உண்மைத்தமிழன்!

    அந்த சைக்கோ உடனே அவனது சல்மா அயூப் என்ற வலைப்பூவையும், இந்த போலி வலைப்பூவையும் டெலிட் செய்யாவிட்டால் அவன் சைபர் போலிஸின் வருகையை எதிர்நோக்க வேண்டியிருக்கும். போலிஸ் அவன் வீட்டுக்கோ அல்லது கிண்டியில் இருக்கும் அலுவலகத்துக்கோ எப்போது வேண்டுமானாலும் வரலாம். //

    கிண்டியா? எப்படிய்யா இதெல்லாம் கிண்டிக்கிண்டி எடுக்குறீங்க! கிண்டீல யாரு வலைப்பதிவாளர் இருக்கா? யோசிக்கிறேன்.

  21. தங்கவேல் சொன்னார்,

    //இதுக்கெல்லாம் அசரமாட்டீர்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது……//

    Repeat

  22. இலவசக்கொத்தனார் சொன்னார்,

    இதுக்கு முன்னாடியே நீங்க பின்னூட்டம் போடறதை நிறுத்திட்டீங்கன்னு நினைச்சேன். இல்லையா? :) ))

    இதெல்லாம் ஒரு பொருட்டா மதிச்சு உங்களுக்கு ஒரு எல்லைக்கோட்டை போட்டுக்காம அடிச்சி ஆடுங்க. எப்படியும் நாங்க எலிக்குட்டி யானைக்குட்டி எல்லாம் பார்த்துதானே வெளியிடறோம்.

  23. Udhayakumar சொன்னார்,

    //சமீப காலமாக வலைப்பதிவுகளில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. //

    டிட்டோ :(

  24. VSK சொன்னார்,

    சேதியறிந்து வருந்துகிறேன்.
    நீங்கள் எடுத்தது சரியான முடிவே.
    நிலைமை சீராக வேண்டுகிறேன்.

  25. பூக்குட்டி சொன்னார்,

    கேவலாமான இழிபிறவி அவன்.. அதுமட்டும் தெரிகிறது..

  26. குமரன் (Kumaran) சொன்னார்,

    மீண்டும் உங்களுக்கு இந்தத் தொல்லையா? வருந்துகிறேன் பொன்ஸ். :-(

  27. கோபி(Gopi) சொன்னார்,

    பொன்ஸ்,

    நீங்களும் வலைப்பதிவூடக வன்முறையால் பாதிக்கப்பட்டதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

    ஆனால் இப்பிரச்சனையை எதிர்கொள்ள பின்னூட்டம் போடாமல் இருப்பதைக் காட்டிலும் வேறு ஏதும் நல்ல மாற்று இருக்கிறதா என யோசியுங்கள். வலைப்பதிவில் பின்னூட்டமிடாமல் இருப்பது கடினம்.

  28. முத்துகுமரன் சொன்னார்,

    வருத்தமளிக்கும் முடிவு என்றாலும், உங்களுக்கு வசதிப்பட்ட முடிவை நீங்கள் எடுத்திருக்கின்றீர்கள்.

    இப்போதைக்கு வேறெதுவும் சொல்லத் தோணவில்லை.

  29. பொன்ஸ்~~Poorna சொன்னார்,

    நண்பர்களே!,
    வருத்தங்களுக்கும், ஆறுதல் பின்னூட்டங்களுக்கும் நன்றி…

    அமுகவினரின் உதவியால், இந்தப் பக்கம் இப்போது நீக்கப்பட்டுவிட்டது என்று காண்கிறது. தேன்கூட்டில் எப்படிப் பதிவு செய்தார்கள் என்பது மிகப் பெரிய ஆச்சரியம். அமுகவினரின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு தேன்கூடு மூலம் நல்லதொரு உதவி கிடைக்க இது ஏதுவாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.

    பின்னூட்டங்களில் தொடர்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்…

    பின்னூட்டமிட்டு, ஆதரவு தெரிவித்த அனைத்த நண்பர்கள், மற்றும் உடனடியாக களத்தில் இறங்கி உதவிய அமுக நண்பர்களுக்கு சிறப்பு நன்றி :) ))

  30. Anonymous சொன்னார்,

    how come thenkoodu aggregated that? it shows who all are behind these cheap tactics.

    anony illai

  31. பங்காளி... சொன்னார்,

    இப்ப சந்தோசம்தானே…நாம சிங்கம்னு காட்டியாச்சி…

    இனியென்ன அடிச்சி ஆடுங்க தாயே…

    (ஒடனே நான் யானையாக்கும்னெல்லாம் சொல்லப்டாது…இப்ப நாம சிங்கந்தான்…சரியா…)

  32. வெற்றி சொன்னார்,

    பொன்ஸ்,
    வருத்தமான செய்தி. உங்கள் முடிவு இப் பிரச்சனைக்குத் நிரந்தரத் தீர்வாகுமா என்பதில் எனக்கு ஐயம் இருந்தாலும், குறுகியகாலத்திற்கு இம் முடிவு ஒரு தீர்வாக இருக்கும் என நம்புகிறேன்.

    பி.கு:- இதுதான் நான் போடும் கடைசிப் பின்னூட்டம் கூட.:)))
    வைகாசி[மே] மாதக் கடைசி வரை கொஞ்சம் busy. அதனால் தமிழ்மணப்பக்கம் வருவது மிக மிக குறைவாக இருக்கும். Hopefully, நான் மீண்டும் திரும்பி வருவதற்குள் உங்களின் இச் சிக்கல் விலகிவிடும் என எதிர்பார்க்கிறேன்.

  33. தமிழ்நதி சொன்னார்,

    இவ்வளவு கேவலமான மனோநிலையை உடையவர்கள் எதற்காக எழுதவருகிறார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் எத்தனை வேதனையடைந்திருப்பீர்கள் என்றெண்ண மனவருத்தமாக இருக்கிறது பொன்ஸ். பின்னூட்டம் இடுவதை இப்போதைக்கு நிறுத்தினாலும் எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள். நான் அறிந்தவரை நீங்கள் துணிச்சலானவர். இதற்கெல்லாம் சோர்ந்துபோய்விடமாட்டீர்கள் என நம்புகிறேன்.

  34. சின்னக்குட்டி சொன்னார்,

    வன்மையாக கண்டிக்கவேண்டிய விடயம். தமிழ்மணம் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  35. Nandha சொன்னார்,

    ஒரு குரூர புத்தி கொண்ட சாடிஸ்டால் மட்டுமே இது போன்ற காரியங்களைச் செய்ய முடியும்.

    இப்போதைக்கு இது முடிந்து விட்டாலும், இம்மாதிரியான அநாகரீக மனிதர்களுக்கு எப்படி நிரந்தர பாடம் புகட்டுவது என்று யோசிக்க வேண்டும்.

    நீங்கள் பின்னூட்டங்களில் தொடர வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்.

  36. SurveySan சொன்னார்,

    இதுக்கெல்லாம் அசந்தா எப்படீங்க?

    தொடர்ந்து அடிச்சு ஆடுங்க.

    ‘மட்டமா’ எவனாவது உங்க பேர்ல எழுதினா, அதை பிரித்தறிய படிக்கரவங்களுக்கு தெரியுமே.
    சோ, நோ வொறீஸ் :)

    ஆமா, அந்த ‘போலீ’ யாருன்னு, சில பேருக்கு தெரிஞ்சிருக்கே (பா.பாரதி?) – திட்டவட்டமா தெரிஞ்சா, வெளிப்படையா சொல்லிடுங்க. எல்லாரும் சேந்து தடா போட்டுடலாம் :)

  37. மனதின் ஓசை சொன்னார்,

    பொன்ஸ்,
    மிகவும் வருத்தம் அளிக்கும் நிகழ்வு.உங்கள் முடிவு சரியென்றே படுகிறது.

  38. செல்வநாயகி சொன்னார்,

    நீங்கள் துணிச்சலானவர். இதற்கெல்லாம் சோர்ந்துபோய்விடமாட்டீர்கள் என நம்புகிறேன்.

    தொடர்ந்து வழமைபோல் பின்னூட்டங்களும் எழுதிக்கொண்டிருங்கள் பொன்ஸ்.

  39. லக்கிலுக் சொன்னார்,

    உங்கள் பார்வைக்கு இப்பிரச்சினையை கொண்டுவராமலேயே தீர்த்துவிடலாம் என்று அமுகவினர் முடிவுசெய்திருந்தோம். க்ளைமேக்ஸ் நேரத்தில் உங்களுக்கும் எப்படியோ தெரிந்துவிட்டது. எனவே அமுகவினரின் ஆப்பரேஷன் முழு வெற்றி என்று சொல்லமுடியாது. நாங்கள் எதிர்பாராதவிதமாக நீங்கள் பின்னூட்டம் இடுவது குறித்த ஒரு முடிவை வெளியிட்டு விட்டீர்கள். பிரச்சினை முடிந்ததால் இனி உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வீர்கள் என நம்புகிறோம்.

    ஆப்பரேஷனில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட அமுகவின் டெல்லி கிளை, சென்னை கிளை, பெங்களூர் கிளை, பாஸ்டன் கிளை, லாஸ் ஏஞ்சல்ஸ் கிளை, மெல்போர்ன் கிளை, பாரிஸ் கிளை மற்றும் நங்கநல்லூரின் குட்டிக்கிளை செயல்வீரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  40. தருமி சொன்னார்,

    முழுமையாகப் புரியவில்லையென்றாலும் நடப்பது என்னவோ வருத்தத்தைத்தான் தருகிறது. என்ன செய்யவேண்டுமென உங்களுக்குத் தெரியாதா என்ன? ஆதரவும், அன்பும் எப்போதும் உண்டு.

  41. நண்பன் சொன்னார்,

    பொன்ஸ்,

    நேர்மையாக இயங்குபவர்களை – அவர்களின் சார்பு நிலை எத்தகையதாக இருந்தாலும் – குறி வைக்க மாற்றுக் கருத்தினர் இருக்கின்றனர் என்பது வருத்தப்பட வைக்கிறது.

    கருத்து ரீதியாக மோத இயலாத பொழுது, மறைந்திருந்து ஆபாசத்தின் துணை கொண்டு தாக்குவது இவர்களது வழக்கமாக இருக்கிறது.

    ஆனால் இதற்காகப் பயந்து கொண்டு, தன்னை முடக்கிக் கொள்வது – அவர்கள் எதை எதிர்பார்த்தார்களோ – அதற்கே பலியாவது – அவர்களது செயலுக்கான நியாயத்தைக் கொடுத்து விடக் கூடும் – அதாவது உங்களை முடக்கிப் போடுவது மட்டுமே அவர்களது நோக்கமாக இருக்கும் பட்சத்தில்.

    அதனால், இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாது, வழக்கம் போல நீங்கள் இயங்குங்கள் – எந்த மாற்றமுமின்றி. நேர்மையான வலைப்பதிவர்களுக்கு அசல் எது, போலி எது என்று பிரித்தரிவதில் ஏதும் பிரச்சினை இருக்காது.

    Keep yourself up, against those idiots.

    நண்பன்

  42. மலைநாடான் சொன்னார்,

    இதற்குப்பின்பேனும், இத்தகைய பேடிகள் திருந்துவார்களா?. ச்சீ என்ன கேவலமான ……

    பொன்ஸ்!
    உங்களது நேர்மைமிகு நேசம் துணைக்குத் திரட்டிருப்பதைப் பார்த்தபின்னும் சோர்வுறத் தேவையில்லையென்று கருதுகிறேன்.

    உறுதுணையாய் நின்ற நட்புள்ளங்களே!
    உங்களை நினைக்கையில் உவகை.

    நன்றி.

  43. லிவிங் ஸ்மைல் சொன்னார்,

    தாமதத்திற்கு மன்னிக்கவும்,

    மேற்படி சைக்கோவை, கண்டிப்பாக தண்டிக்க ஆவண செய்வோம்.

    இத்தனை பேரின் ஆதரவும் இருக்கையில் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யலாம்..

  44. sivagnanamji(#16342789) சொன்னார்,

    என்ன நடக்குது?எதுவும் புரியலே!

    எதிலும் சரியான முடிவைத்தான்
    சரியான நேரத்தில் எடுப்பீர்கள் என்ற
    நம்ம்பிக்கை எனக்கு உண்டு

  45. உங்கள் நண்பன் சொன்னார்,

    அன்பு அக்கா பொன்ஸ்!
    நான் கடந்த 10 நாட்களாக வலையுலகில் இல்லை! இருந்தாலும் தங்களின் பதிவைப் படித்ததும் உங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சனை என்பது மட்டும் புரிகின்றது!
    //இந்த முகமிலிகளுடன் மோதி, தர்மயுத்தம் செய்ய எனக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலும், இதைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பின்னூட்டமிட்டால் கூட, ஒவ்வொருமுறையும் சோதித்து வெளியிடும் சிரமத்தை நண்பர்களுக்குக் கொடுப்பதில் விருப்பமில்லாததாலும், பின்னூட்டங்கள் இடுவதை நிறுத்திக் கொள்வது ஆகச் சிறந்த வழியாகத் தெரிகிறது.
    //

    தங்களின் நிலைமை நன்றாகப் புரிகின்றது! ஆனால் தாங்கள் இதை தற்காலிகமாக நிறுத்துக் கொள்ளவும்! பிரச்சனைகள் சரியானதும் பழைய உற்சாகத்துடன் அக்காவை எதிர்பார்கி(றோம்)றேன்!

    //Hariharan # 03985177737685368452 said…
    //உங்க பெயரில ஒரு போலி உருவானால்த்தான் நீங்க உண்மையான ஒரு தமிழ் வலைப்பதிவர்.//
    //பின்னூட்டம் போடாமல் தமிழ் பதிவுலகத்தில் சமாளிக்க முடியாது //
    இக்கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன்!
    //

    இந்தக் கருத்துக்களுக்கு முற்றிலுமாக மறுக்கின்றேன்!
    பாருங்கள் பொன்ஸ் தாங்கள் பின்னூட்டமிடவில்லை என்றதும் பல நண்பர்கள் வருத்தப் படுகிறோம்!நிலைமை சரியாகி மீண்டும் வர வாழ்த்துகிறோம்!

  46. முத்துலெட்சுமி சொன்னார்,

    தொடர்ந்த இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைக்குமா? என்ன நடக்கிறது என்றே புரியாமல் இருக்கிறது. நீங்கள் இப்பிரச்சைனக்கு முன்பே சிறிது பின்னூட்டுவதும் பதிவிடுவது குறைத்தூக் கொண்டதாக கொத்ஸ் சொல்லுவதுபோல் நானும் உணர்ந்தேன். மீண்டும் வழக்கம்போல் நீங்கள் செயல்பட வேண்டும் என்றே நானும் ஆசைப்படுகிறேன்.

  47. கல்வெட்டு (எ) பலூன் மாமா சொன்னார்,

    :-( ((

  48. Anonymous சொன்னார்,

    //ஆமா, அந்த ‘போலீ’ யாருன்னு, சில பேருக்கு தெரிஞ்சிருக்கே (பா.பாரதி?) //
    சர்வேசன், சொல்றத தெளிவா சொல்லுங்களேன்.. பா.பாரதி தான் போலி என்கிறீர்களா? அல்லது பா.பாரதி அந்தச் சிலரில் ஒருவர் என்கிறீர்களா?

  49. அரவிந்தன் நீலகண்டன் சொன்னார்,

    பலத்த மின்னலில் மோடமிழந்து இன்றைக்குதான் இப்போது மீண்டும் இங்கு வருகிறேன். காலையில் பாலபாரதி விசயத்தைக் கூறினார்.வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒரு விசயம். பாலபாரதி…இது திராவிடம், பார்ப்பனம், கம்யூனிசம், இந்துத்வம் தொடர்பற்றதென நினைக்கிறேன். ஏனெனில் எனக்கு வரும் ஆபாச பின்னூட்டங்கள், வீட்டிலிருக்கும் பெண்களை திட்டி வரும் வார்த்தைகள், அதேபோல என்னைக்குறித்து பதிவிட்ட மற்றொருவருக்கு வந்த பின்னூட்டம் இத்யாதியை வைத்து இது திராவிட பகுத்தறிவின் முத்திப்போன நிலை என நினைத்தேன். தவறு என புரிகிறது. நிற்க…ஒரு சக பதிவரை இத்தகைய ரீதியில் தாக்கியுள்ள தறுதலை நாயை தக்க விதத்தில் வெளிப்படுத்தி தோலுரிப்பது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துக்கு நலம். சில ஆரோக்கியமற்ற கீழ்த்தர அசிங்கங்களுக்கு ஆப்பு வைத்த மாதிரியும் ஆயிற்று. இந்த விசயங்கங்களை புறந்தள்ளி நமக்கு வளர குப்பையை அள்ளி வெளியே கொட்டிய மாதிரியும் ஆயிற்று. பொன்ஸ்…that which does not kill you makes you stronger. உங்கள் செயல்பாட்டின் எந்த பகுதியையும் இறக்கவிடமால் தொடர்ந்து இயங்குங்கள். கருத்தியல்கள் வேறுபட்டாலும் தங்கள் கருத்து சுதந்திரத்தை காவாலித்தனமாக நெறிக்கப்பார்க்கும் எந்த முயற்சியையும் கடுமையாக எதிர்ப்பதில் உங்கள் குரலுடன் இணைகிறேன்.

  50. செந்தழல் ரவி சொன்னார்,

    ///
    எதிலும் சரியான முடிவைத்தான்
    சரியான நேரத்தில் எடுப்பீர்கள் என்ற
    நம்ம்பிக்கை எனக்கு உண்டு

    Tue Apr 10, 10:56:00 AM 2007
    ///

    பிரச்சினை சூரியனை கண்ட பனி போல் கரைந்துவிட்டதல்லவா…இனிமேல் பின்னூட்டம் எல்லாம் கரெக்டா போடுங்க..

  51. விழிப்பு சொன்னார்,

    பொன்ஸ்,

    விரைவில் இந்த பிரச்சினை தீரவேண்டும். நீங்கள் முன்போல் சுதந்திரமாக வலையுலகில் இயங்கவேண்டும் என்பதே என் அவா.

    -விழிப்பு

  52. -L-L-D-a-s-u சொன்னார்,

    இப்போது தான் என் பக்கமெல்லாம் வந்து , பின்னூட்டமிட்டுக்கொண்டிருந்தீர்கள்.. அதற்குள் இப்படி ஒரு முடிவா.. பொன்ஸ் பூர்ணா என்று
    ப்ரொஃபைலில் வரும்போதே நினைத்தேன் போலி பிரச்சினையாய் இருக்குமோ என்று.. ஏன் தான் சிலரின் மனம் குறுகியிருக்கிறது என்று தெரியவில்லை ..

  53. Anonymous சொன்னார்,

    please reconsider your decision

    - oru thamizmana kudimagan

  54. Raghs சொன்னார்,

    பொன்ஸ் (அக்கா – வேண்டாமெனில் வெட்டிவிடவும்)..

    l-l-d-a-s-u சொன்னதுபோல் நானும் நந்தாவின் பின்னூட்டத்தில் ‘பொன்ஸ் – Poorna’ என்ற பெயரைப் பார்த்தேன். உடனே உங்கள் விருப்பம் அப்படி என்று நினைத்தேன்.. இங்கு வந்தபின் தான் தெரிகிறது இந்தக்கூத்து..

    என்ன சொல்லியும் எவ்வளவு சொல்லியும் இதுபோல் ஆட்கள் (ஆட்கொல்லிகள்) திருந்த மாட்டார்களா?

    உண்மையாக, வன்மையாகக் கண்டிக்கத்தகுந்த செயலே..

    ஏற்கெனவே அன்பர்கள் பலர் கூறியபடி உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்…

    எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு என்று உண்டு! அது உங்கள் விஷயத்தில் கூடிய சீக்கிரம் கிடைக்கட்டும் என்ற நம்பிக்கை கலந்த பிரார்த்தனையுடன்…….

    இராகவன் என்ற சரவணன் மு.

  55. கோவி.கண்ணன் சொன்னார்,

    இந்த பிரச்சனை சீக்கிரம் தீர்ந்ததற்கு மகிழ்வாக இருக்கிறது.

  56. சினேகிதி சொன்னார்,

    ithenna palakkam…ellarukum chuma chumma pirachanai kuduthukondu…avaku/avaruku ungalila enna kovamam.

    ama appa “vaadamaliku” pinodam podathu neengala ilai poliya?

  57. பொன்ஸ்~~Poorna சொன்னார்,

    சிநேகிதி, உங்களை ‘ஊக்கப்படுத்தியது’ நானே தான் :) இந்தப் பிரச்சனை சுபமாக முடிக்கப்பட்டுவிட்டது. மேல் விவரங்கள் இங்கே

  58. மங்கை சொன்னார்,

    பிரச்சனை முடிந்தது தெரிந்து மகிழ்ச்சி..

  59. தூயா சொன்னார்,

    இது வேறா…பொன்ஸ் இதை பற்றி நீங்கள் முன்னரே அறிந்துக்கொண்டமை நல்லது தான்

  60. அசுரன் சொன்னார்,

    //பின்னூட்டங்களில் தொடர்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்…//

    முடிவை மாற்றிக் கொண்டீர்கள் அல்லவா? ஏனேனில் உங்களது பின்னூட்டம் ஒன்றை மாசியின் பதிவில் பார்த்தேன்.

    அசுரன்

  61. அசுரன் சொன்னார்,

    //பின்னூட்டங்களில் தொடர்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்…//

    பொன்ஸ்,

    தங்களது உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும், நீங்கள் இந்த சம்பவத்தை ஒட்டி எதுவும் குறிப்பாக உங்களது வலையுலக செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது என்பது எந்த நோக்கத்துக்காக இந்த வன்மூறை செய்யப்பட்டதோ அதை நிறைவேற்றுவதாக மாறி விடும் என்று கருதுகிறேன்.

    எனவே தொடர்ந்து பின்னூட்டமிடுவது உள்ளிட்ட உங்களது செயல்பாடுகளை தொடருவதே சிறப்பு என்று கருதுகிறேன். அதாவது உங்களது தனிப்பட்ட வேறு விருப்ப நாட்டங்கள் வலையுலக செய்ல்பாடுகளை வரம்பிட்டுக் கொள்ள நிர்பந்தித்தால் தவிர்த்து.

    அசுரன்

  62. ஓகை சொன்னார்,

    மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் எனக்கொரு ஆயாசத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. தமிழ் இணையம் எவருக்கும், எதற்கும் பலனில்லாமல் போய் பலருக்கும் துன்பமளிக்கும் இடமாக ஆகிவிடும் போலிருக்கிறது.

  63. திரு சொன்னார்,

    //அசுரன் பிளிறினது said…

    பொன்ஸ்,

    தங்களது உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும், நீங்கள் இந்த சம்பவத்தை ஒட்டி எதுவும் குறிப்பாக உங்களது வலையுலக செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது என்பது எந்த நோக்கத்துக்காக இந்த வன்மூறை செய்யப்பட்டதோ அதை நிறைவேற்றுவதாக மாறி விடும் என்று கருதுகிறேன்.

    எனவே தொடர்ந்து பின்னூட்டமிடுவது உள்ளிட்ட உங்களது செயல்பாடுகளை தொடருவதே சிறப்பு என்று கருதுகிறேன். அதாவது உங்களது தனிப்பட்ட வேறு விருப்ப நாட்டங்கள் வலையுலக செய்ல்பாடுகளை வரம்பிட்டுக் கொள்ள நிர்பந்தித்தால் தவிர்த்து.

    அசுரன்//

    பொன்ஸ்,

    உங்கள் உணர்வை புரிந்துகொள்கிறேன். இந்த விசயத்தில் அசுரன் சொல்லியது தான் எனது கருத்தும். உங்களது செயல் மற்ற பெண் பதிவர்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


கருத்துத் தெரிவிக்கவும்