12.15.06
பின்னூட்டம் ஏற்காத பீட்டா
கவிதா, சர்வேசன், செந்தில் போன்ற ப்ளாக்கர் பீட்டா பதிவுகளில் சாதா ப்ளாக்கர் கணக்குடையவர்கள் பின்னூட்டமிட்டால், அவை ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. நேற்று, டிசம்பர் 14,2006லிருந்து இந்தப் பிரச்சனை புதிதாகத் துவங்கியுள்ளது.
அறிகுறி:
பீட்டா பதிவுகளில் பின்னூட்டப் பெட்டிக்கு நகரும் தருவாயில், ஏற்கனவே ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைந்திருந்தாலும், உங்களின் பெயர் காண்பிக்கப்படாது. கீழுள்ள படம் போல:

பிளாக்கர் மென்பொருளாக்கக் குழுமம் ஏற்கனவே இந்தப் பிரச்சனையைக் கண்டுகொண்டுள்ளது. இதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி அவர்கள் வேலை செய்துகொண்டே இருக்கும்போதில், தற்காலிகத் தீர்வாக முன்வைப்பது:
- புதுப் பக்கம் ஒன்றைத் திறந்து கொண்டு http://www.blogger.com/login.g என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
- இதில் உங்கள் ப்ளாக்கர் பயனர்/கடவுச் சொல்லை அளித்து லாகின் செய்யவும்
- பீட்டா ப்ளாக்கரில், நீங்கள் பின்னூட்டமிடவேண்டிய பக்கத்தின் உரலை எடுத்து இப்போது லாகின் செய்து வைத்திருக்கும் புதுப் பக்கத்தின் address bar இல் ஒட்டிவிடவும்.
- இப்போது உங்கள் பெயர் பதிவில் தெரியும். நீங்களும் உங்கள் பயனர் பெயரிலேயே பின்னூட்டமிடலாம்.
இந்த வழி கடினமாக இருந்தால், இருக்கவே இருக்கிறது அனானி மற்றும் அதர் ஆப்ஷன்கள்
. மேலும் தகவல்களுக்கு இங்கு தட்டவும்.