09.27.06
விடைகள்….. மான்குட்டி..
- அட அடுத்து அக்டோபர் மாதம் புதிர்களுக்கான விடைகள், மற்றும் விளக்கங்கள். இத்துடன் ஐயா ப்ளோரைப் புயல் அவர்கள் அளித்த வெண்பாக்களையும் இங்கே பதிக்கிறேன்..:
- 1. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 13 என்ற தேதி வெள்ளிக் கிழமையாக இல்லாமல் இருக்க முடியுமா?
முடியாது2. அப்படியானால் அதிக பட்சமாக எத்தனை நாட்கள் 13 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இரண்டுமாகவும் இருக்க முடியும்?
அதிகபட்சம் – மூன்று
குறைந்த பட்சம் – ஒன்றுவிளக்கம்:

படத்தில் உள்ள விவரத்தை வைத்து remainder- கள் 0- 6 வரை வரலாம். இதில் 0 என்றால், ஜனவரி ஒன்று என்ன கிழமையோ, அந்த மாதத்தின் 13 ஆம் தேதியும் இதே கிழமை தான். 1 என்றால் ஜனவரி 1 இல் இருந்து அடுத்த கிழமை. இப்படிப் பார்க்கும் போது, 0-6 வரை எல்லா எண்களும் ஒரு முறையாவது வந்து விடுகிறது. எனவே இதில் வெள்ளிக்கிழமை ஒரு முறையாவது வந்துவிடும். அதே போல் சாதா ஆண்டுகளில் 2 என்னும் எண்ணும், லீப் வருடங்களில் 6 என்னும் எண்ணும், மூன்று முறை வருகின்றன. இந்த வகையில் சாதா ஆண்டுகளில் ஜனவரி 1 புதன் கிழமையாக இருந்தால், 3 13-வெள்ளிகளும், லீப் வருடங்களில் ஜனவரி 1 சனிக் கிழமையாக இருந்தால், மூன்று 13-வெள்ளிகளும் சாத்தியம். எனவே குறைந்த பட்ச எண்ணிக்கை 1, அதிக பட்ச 13 வெள்ளிகளின் எண்ணிக்கை 3பதின்மூன்று வெள்ளியின்பாற் பட்டுவரும் நாட்கள்
அதுவாண்டில் எத்தனை ஈண்டருகும் என்ன
பதின்மூன்று ரோமத்தில் பாங்காய் எழுத
பதிலாக நிற்கும் பிரிந்து.
[XIII - X - முடியாது என்பதைக் குறிக்க, III - அதிகபட்சம் 3 வெள்ளிகள் என்பதைக் குறிக்கிறது.] - பெருக்குத் தொகை 36 வர வேண்டுமெனில், அதன் factors (தமிழில்?
)
1, 2, 18 = 36, 21
1, 3, 12 = 36, 16
1, 4, 9 = 36, 14
1, 6, 6 = 36, 13
2, 2, 9 = 36, 13
2, 3, 6 = 36, 12
3, 3, 4 = 36, 10இதில் 13 என்பது பக்கத்து வீட்டு எண்ணாக இருந்தால் மட்டும் தான் குழப்பம் வரவாய்ப்பிருக்கிறது. இதில் முதல் மகள் பள்ளிக்குப் போவதால், மற்ற இரு மகள்கள் தான் இரட்டையர்களாக இருக்க வேண்டும். எனவே, இதற்கான விடை 2, 2, 9
- விடை:
அருகோணம் உள்ளேயோ ஆறுண்டு முக்கோணம்
அருக்கணுமே மூன்றாய் அவற்றை – வருகும்
முன்னுனி ஒட்டமூ முக்கோணம் சுற்றருகில்
ஒன்றைவிட்டு ஒன்றை ஒழி.
- இந்தத் தேதி ஒரு 3 எண்களின் பெருக்குத் தொகை. அத்துடன் நான்குவிதமான பெருக்கல்கள் மட்டுமே சாத்தியமான ஒரு எண்.
எனவே விடை 24. இதன் factors:
1, 2, 12
1, 3, 8
1, 4, 6
2, 2, 6 (இது ஆட்டைக்கு சேர்த்துக் கொள்ளப் பட மாட்டாது. ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான மக்கள் இருந்தார்களே!)
2, 3, 4.ராமு கேட்ட கேள்வி = ஒரு குழுவில் ஒரே ஒருவர் இருப்பது சாத்தியமா? என்பதாகும்.
இல்லை என்று சொன்னவுடன், பதிலான 2,3,4 என்பதைச் சொல்லிவிட்டார்.
சிவஞானம்ஜி, சிவகுமார், கத்திரிக்காய் ஆகியோர் சொன்ன 30உம் சரிதான்.
(factors:
1, 2, 15
1, 3, 10
1, 5, 6
2, 3, 5)
ஆனால், இந்த மாதம் என்ற சொல்லை இந்தப் புதிரில் சேர்த்ததே கடந்து போன தேதி என்பதைக் குறிக்கத் தான்
புதிரில் கலந்து கொண்ட செந்தில் குமரன், ஜயராமன், ராசுக்குட்டி, சிவஞானம்ஜி, சிவகுமார், மனதின் ஓசை, முரட்டுக் காளை, ஆவி, கத்திரிக்காய், ப்ளோரைப் புயலார், உதயகுமார், எல்லாருக்கும் நன்றி
. போட்டிக்கு சைடில் நின்று பின்னூட்ட ஆதரவு மட்டும் கொடுத்த ராம் மற்றும் ஸ்யாமுக்கு ஹி ஹி.. வேறென்ன, நன்றி தான்:)
சரியா பதில் சொன்னவங்களுக்கு இதோ பரிசு, சர்வீஸ் போய் புதுப் பொலிவுடன் வந்த மான்குட்டியின் போட்டோ: