06.28.06

நிலவுக்குப் போகும் நட்சத்திரம்

.... இங்கே பதியப்பட்டது பதிவுகள் இல் 7:05 மு.பகல் by பொன்ஸ்

தமிழ்மண நட்சத்திரம்னா தினசரி ஒரு பதிவு போட்டு தமிழ்மண முகப்பில் இருக்கணும்னு பார்த்தே பழகிடிச்சு.. இப்போ கடந்த ரெண்டு நாளா கல்யாண மாப்பிள்ளை நிலவு நண்பன் தான் நட்சத்திரம்னு தெரிஞ்சதிலிருந்து ஒரே பதிவு தமிழ்மண முகப்பில் இருப்பது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..

அதனால், ரசிகவ் ஞானியார் பற்றி எனக்குத் தெரிஞ்சதை ஒரு பதிவாகப் போடலாம் என்று பார்க்கிறேன்.. அப்படியே எனக்கு ரொம்ப தெரியும்னு நினைச்சி படிக்காதீங்க.. நான் வந்த நாளிலிருந்து(அதிகமில்லை ஜென்டில்மேன், March 2006 தான்) ஞானியார் என்ன புதுப் பதிவு போட்டாலும் படிச்சிடுவேன். அந்த மாதிரி ஒரு தொடர் வாசகி என்னும் முறையில் எனக்குத் தெரிஞ்சதை இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நிலவு நண்பன் பக்கங்களில் எல்லாக் காலத்துக்கும், எல்லாப் பொருளிலும் கவிதைகள் இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். அப்பாவுக்கான அவரது கடிதம் மிகச் சமீபத்தில் மீள்பதிவாகி வந்தது.

காதல் கவிதைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்..

இலங்கைத் தமிழர்களுக்கான அவரது கவிதையும் இப்போதும் பொருந்தும் ஒன்று (இனிவரும் காலங்களில் பொருந்தாமல் போகட்டும்! )

எந்தக் காரணங்களுக்காகவோ தனி வலைப்பூ தொடங்கிப் பார்த்திருக்கிறோம். சமூகத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தனி வலைப்பூ தொடங்கியது ஞானியார் ஒருவர் தான் என்று நினைக்கிறேன். அவரது விதைகள் என்னும் வலைப்பூ மூலம் பல உயிர்களைப் பிழைக்க வைத்தது, வைத்துக் கொண்டிருப்பது எத்தனை பாராட்டினாலும் தீராது..

அட, மாப்பிள்ளையா லட்சணமா சமையலும் பழகி இருக்காருங்க..

கவிதைல நகைச்சுவை குறைவுன்னு யாருங்க சொன்னாங்க? இதைப் பார்க்கச் சொல்லுங்க..

நான் கொடுத்த அறிமுகத்தைப் பார்த்துட்டீங்க.. நிலவு நண்பன் தானே தன் ஒரு வருட வலைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்த நினைவுகள் இங்க இருக்கு. அதையும் பார்த்துடுங்க..

ஞானியார் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவுகளை மட்டும் சொல்லிட்டு இந்தப் பதிவை முடிச்சிக்கிறேன்:

* இணையத்தில் கவிஞர் பெயரில்லாமல் வலம் வந்த காலத்திலேயே இந்தக் கவிதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம்ம நிலவு நண்பன் எழுதியது என்றவுடன், இன்னும் அதிகம் விரும்பிய கவிதையாகி விட்டது. இதுவரைக்கும் பார்க்கலைன்னா, படிச்சி பாருங்க. நல்ல கவிதை.

* அடுத்து எனக்குப் பிடிச்சது அவரோட காதலர் தினப் பதிவு. இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள். உரைநடைப் பதிவுல இத்தனைக் கவிதையா எழுத முடியுமா என்ன? அது சரி, காதலைப் பத்தி நிலவு நண்பன் எழுதினால் கவிதை வராமல் எப்படி? இந்தப் பதிவுல எங்கயோ ஞானியாரோட நிலவைப் பத்தியும் க்ளூ இருக்கு.. எனக்குத் தான் புரியலை.. உங்களுக்கு? :)

கடைசியா ஊருக்குப் போவதற்கு முன்னால், ஆறு பதிவு போல ஒரு ஐந்து பதிவு போட்டார்.. என்னைத் தான் அடுத்ததா அஞ்சு கேள்விக்கும் பதில் எழுதித் தொடரச் சொன்னார்..

ஞானியார், நமக்கு கேள்வி கேட்கத் தான் தெரியும்.. பதில் சொல்றதுன்னா. “ஹி ஹி” தான்.. அதான் இத்தனை பெரிய பதிவு போட்டிருக்கேனே.. அந்தக் கேள்வியெல்லாம் சாய்ஸ்ல விட்டிரலாமா? :) )

நண்பர்களே, தமிழ்மண நட்சத்திரமான நிலவு நண்பனுக்காக நான் இப்போ ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்.. இந்த ஒரு வாரம், மாப்பிள்ளை சார் ஊரில் இல்லாததால், ஞானியாரைத் தெரிந்த மற்ற நண்பர்கள் இது போல அவரவருக்குத் தெரிந்ததை, ஞானியார் பதிவுகளில் ரசித்ததை, விதைகள் மூலம் சாத்தியமான உதவிகளை, எது பற்றி வேண்டுமானாலும் எழுதுங்க..

தினசரி ஒரு பதிவுன்னு எழுதினா நல்லா இருக்கும்.. தமிழ்மண நண்பர்கள் சார்பா ஞானியார்-ஜஹானுக்கு நமது திருமணப் பரிசு.. இந்தப் பதிவெல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சம் வெட்டி ஒட்டி ஒரு கார்டுல போட்டு கல்யாணத்துக்கு நேர்ல போகிறவங்க அவர் கையில் கொடுக்கலாம்.. – சஜஷன் தான் – என்ன சொல்றீங்க?

அடுத்த பக்கம்